Asianet News TamilAsianet News Tamil

சிரிச்சு சிரிச்சு சின்னாபின்னமாக வைத்த சித்தப்பு... இதுக்கும் மேலே நீங்க ஏன் வளரணும் சரத்குமார்ஜி..!

அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி வைத்ததை இன்று இண்டர்நெட் சர்வரே கதறக் கதற வைத்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களைப் பார்த்து கேட்கிறேன்...

Sarathkumar netsons
Author
Tamil Nadu, First Published Mar 20, 2019, 5:54 PM IST

அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி வைத்ததை இன்று இண்டர்நெட் சர்வரே கதறக் கதற வைத்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களைப் பார்த்து கேட்கிறேன்...

’உங்களுக்கெல்லாம்  நம்ம சித்தப்பூ (சித்தி ராதிகா வூட்டுக்காரரை சித்தப்புன்னுதானே சொல்லோணும் டியர் பங்கு!) சரத்துக்கொமாரை பற்றி எழுதிட, அவரையும் டிரெண்டிங் அரசியலுக்குள் கொண்டு வந்திட ஏன் மனசு வரவில்லை? ஒத்த கவுன்சிலர் கூட இல்லாத கட்சியின் தலைவர் டி.ராஜேந்தரின் பேட்டிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பரசண்டேஜை கூட எங்கள் ச.ம.க.வின் தேசியத்தலைவர் அண்ணாச்சி சரத்துகொமாருக்கு நீங்கள் தருவதில்லையே! ஏன்? என்ன காரணம்? Sarathkumar netsons

அவரும் ஒரு கட்சித் தலைவர் வேடத்தை தரித்துக் கொண்டு உங்களையெல்லாம் அவ்வப்போது மகிழ்விக்கத்தானே செய்கிறார்? இப்போது கூட அவர் தந்திருக்கும் பேட்டி ஒன்றை வாசித்துப் பாருங்கள். சிரிக்காமல் எங்கள்  சித்தப்பூ கொடுத்திருக்கும் சீரியஸ் பேட்டியை வாசித்தால் சிரிச்சு சிரிச்சு சின்னாபின்னமாகிடுவீங்க....” 

ஓவர் டூ சரத்துகொமார் பேட்டி.... “கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க.வுடன் தான் பயணித்து வருகிறோம். (தல அதுக்கு மின்னாடி நீங்க தி.மு.க.வுல ஒண்டி இருக்கிறச்சே ‘நான் இறந்த பின் என் உடல் மீது தி.மு.க.வின் இரு வர்ண கொடியை போர்த்தித்தான் ஊர்வலம் எடுத்துச் செல்ல வேண்டும்.’ என்று முழங்கியதை இந்த இடத்தில் நினைவு கூற கடாமையும், காட்டுப்பாடும் பட்டுள்ளேன்! என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.) இதனால் எங்களின் கொள்கைகளை வெளியில் பரவலாக எடுத்துச் செல்ல முடியவில்லை. (குத்து மதிப்பாக பரவலாகன்னு சொன்னா எப்பூடி சித்தப்பு? எத்தினி சதுர அடி, எத்தினி அகலம், எத்தினி நீளமுன்னு சொல்லுங்க.) Sarathkumar netsons

இனியும் இதேநிலை நீடித்தால் எங்களின் தனித்தன்மை போய்விடும் (அப்படின்னு ஒண்ணு இருந்தால்தானே போகும் பாஸு!), வளர்ச்சி இருக்காது (இதுவே நல்ல ஹைட்டுதானே! இதுக்கும் மேலே நீங்க ஏன் வளரணும் சரத்துஜி?)  மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிகூட எடுக்காமல் இருக்க முடியாதே! (ஆமாமா, நம்ம அன்புமணி கூட மாற்றத்தை எப்படி கொண்டாந்தாருன்னு பார்க்கத்தானே செஞ்சோம்! ஓ.கே. நீங்க பேசுங்க....) தனித்து நிற்பது (எப்போ சித்தப்பூ? குத்தால அருவியில குளிக்கிறப்பவா?) குறித்து எப்போதோ யோசித்தோம். Sarathkumar netsons

ஆனால் நிர்வாகிகள் இப்போது வேண்டாம் (ஆமா அண்ணாச்சி, இப்ப வெயிலு காலம் பாத்தீயளா. மெயின் பால்ஸு, அஞ்சருவின்னு எதுலேயும் சொட்டு தண்ணி இல்ல. நீங்களா வாட்டர் பாட்டில்ல கொண்டாந்து ஊத்திக்கிட்டாதான் உண்டு) என்று சொல்லி ஒவ்வொரு முறையும் தள்ளிப்போட்டனர். இனியும் காலத்தை கடத்த விரும்பவில்லை.” இப்ப சொல்லுங்க மிஸ்டர் மீம்ஸ் பாய்ஸ்...எங்க சித்தப்பூவையும் டிரெண்டிங்குக்குள்ளே சேத்துக்குவீகளா இல்லையா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios