மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,  குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகேதான் குற்றம் சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு நல்ல திட்டமாக இருந்தால் வரவேற்பதும், தவறாக இருந்தால் அதனை சுட்டிக்காட்டுவதும் எங்கள் கடமையாக உள்ளது என்றார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, எம்.எல்.ஏ. கருணாசை கைது செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரியின் டவுசரை கழற்றுவேன் என்கிறார். ஏன் அவரை உடனடியாக கைது செய்ய முடியவில்லை என்பது தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். போலீஸ் அதிகாரிகள் மீது குறை இருந்தால், டிஜிபியிடம் புகார் தெரிவித்திருக்கலாம்.

காவல் துறையை மதிக்கமாட்டோம், நீதிமன்றத்தை மதிக்கமாட்டோம், தூண்டுதலாக கொலை செய்யலாம்... தப்பு கிடையாது... அதை என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள் என்பதெல்லாம் அநாகரிகமானது.  எனவே அவர்கள் மீது சட்டம் பாய வேண்டும். ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரை முதலமைச்சர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.