முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வந்ததிகள் கிளமபி வந்தன. பின்னர் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், பொறுப்பு கவர்னரின் அறிக்கை வந்த பின்னரே முதல்வரின் நிலை குறித்து ஓரளவுக்கு தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், மற்றொரு முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன், செய்தி தொடர்பு பொறுப்பில் உள்ள சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் மட்டுமே பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து முதல்வரின் நிலை குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும், கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே தொலைக்காட்சி விவாதங்கள் மூலமாக பிரபலமடைந்து வரும் சி.ஆர்.சரஸ்வதிதான், தொடர்ந்து நேரில் சென்று பார்த்ததுபோல் கருத்து தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் இன்றும் சி.அர்.சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, விரைவில் பூரண குணமடைந்து விட்டுக்கு வந்துவிடுவார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரு புதிய தகவலாக சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்து இருப்பது என்றவென்றால்… “முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், அரசு பணிகளில் உள்ள தனது கடமையை அவர் மருத்துவமனையில் இருந்தே செய்து வருவதாகவும் இதுவரை யாரும் கூறாத புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.