பாஜகவில் வீரப்பன் மகள் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில்  பாஜகவில் இணைந்தார் சந்தனகடத்தல் வீரப்பனின் மகள் வித்தியா ராணி.

சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகள் விஜயலட்சுமி. அவர் தற்போது தாயார் முத்துலட்சுமியுடன் மேச்சேரியில் வசித்து வருகிறார். முத்துலட்சுமி மலைவாழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பையும், கணவர் வீரப்பன் பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். விஜயலட்சுமி பி.ஏ ஆங்கிலம் முடித்து விட்டு எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் திருமாவளவனுடன் கொடியை பிடித்தபடி உள்ள படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீரப்பன்-முத்துலட்சுமி தம்பதியின் மூத்த மகள் வித்யாராணி. இவர் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த மரிய தீபக் என்பவரை மணந்தார். பின்னர் குடும்பமும் நடத்தி வந்தார். இதைக் கேள்விப்பட்டு அதிர்ந்த முத்துலட்சுமி தனது மகளை வீட்டோடு சிறை வைத்தார். வித்யா ராணி மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி வாழலாம் என்று கூறி விட்டது கோர்ட். இதையடுத்து தனது கணவருடன் போய் விட்டார் வித்யாராணி. இந்நிலையில் வித்யாராணி பாஜகவில் இணைந்துள்ளார்.