புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். சென்னை தி நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளது பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை  சுப்ரபாதம் மற்றும்  சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை மற்றும் பக்தர்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளித்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சென்னையிலிருந்து பல்வேறு இடங்களிலிருந்து  ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ததாகவும்முக கவசம் அணிந்து, கிருமிநாசினி தெளித்து வெப்பநிலை பரிசோதித்த பின்னரே கோவில் உள்ளே அனுமதிக்க பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.