ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய வல்லமை பெற்ற பினாகா ராக்கெட் சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது .  இந்தியாவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்து வரும் நிலையில் ராணுவம் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது  அதன் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு, மற்றும்  ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ( டிஆர்டிஓ )  மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ராக்கெட் லாஞ்சர் தான் பினாகா . 

கடந்த 2008ஆம் ஆண்டில் முதல் முறையாக சோதனை செய்யப்பட்ட பினாகா தொடர்ந்து பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த 19ம் தேதியன்று ஒடிசா கடற்கரையில் உள்ள ஏவு தளத்திலிருந்து அந்த ராக்கெட் சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது இந்த ராக்கெட் ஒடிசா கடற்கரையில் இருந்து சண்டிப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது .  ஏவப்பட்ட சில நொடிகளிலேயே 12 ராக்கெட்டுகளுடன்  பினாகா ராக்கெட் சோதனை  வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .  இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த பினாகா ராக்கெட் நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது . 

பினாகா ராக்கெட் லாஞ்சர் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் சந்திப்பூர் கடல்பகுதியில் சோதனையிட்டு வெற்றி பெற்றுள்ளது .  இந்த லாஞ்சர் மூலம் 44 விநாடிகளில் 12 ராக்கெட்டுகளும்  12ம் வெவ்வேறு இலக்குகளை குறிவைத்து ஏவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .  இன்று நடத்தப்பட்ட சோதனையில் இலக்குகள் அனைத்தும் மிகத் துல்லியமாக தாக்கப்பட்டதாகவும் சோதனையின்போது அனைத்து பணி நோக்கங்களும் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.