பிகில்  பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில்  கடந்த  இருதினங்களுக்கு முன்பு  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வருமான வரித்துறையின் சோதனை முடிந்து சில தினங்களுக்கு முன்பு   மீண்டும்  விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அவரை காண பெருமளவு ரசிகர்கள் கூட்டம் வந்ததால்  விஜய் அங்கிருந்த வேனின் மீது ஏறி செல்பி எடுத்து அதை தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.  அதனை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து இருந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரி-ட்விட் செய்திருந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

விஜயின் இந்தப்போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவுக்கும்-  கொச்சின் வந்த போது சன்னி லியோனுக்கும் கூடிய கூட்டம் கூட விஜய்க்கு கூடவில்லை. விஜய்க்கு கூடிய கூட்டம் இவ்வளவுதானா? இதற்கே விஜய் ரசிகர்கள் இத்தனை ஆட்டம் போடுகிறார்களா? என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.