Asianet News TamilAsianet News Tamil

இது அதிமுக ஆட்சி இல்லை.. உடனே நிறுத்துங்க.. போலீசாருக்கு எதிராக கொந்தளித்த கனிமொழி.!

சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது  திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். 

salem police attack farmer dead...Kanimozhi condemnation
Author
Tamil Nadu, First Published Jun 23, 2021, 4:07 PM IST

சேலத்தில் போலீசார் தாக்கியதில் முருகேசன் என்ற வியாபாரி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்பி கனிமொழி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(40). இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்த முருகேசன் மற்றும் அவரது நண்பரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் குடிபோதையில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

salem police attack farmer dead...Kanimozhi condemnation

இதில் வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்.ஐ  மற்றும் உடனிருந்த போலீசார் குடிபோதையில் இருந்த வியாபாரி முருகேசனை கடுமையாக தாக்கியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்புக்கு காரணமாக இருந்த போலீஸ் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் இந்த செயலுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

 

இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது  திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios