சேலம் ஆத்தூர் தொகுதியில் ஜூவா ஸ்டாலினுக்கு பதில் கு.சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சேலம் ஆத்தூர் தொகுதியில் ஜூவா ஸ்டாலினுக்கு பதில் கு.சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தனித்தொகுதியில் ஜூவா ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஸ்டாலின் ஸ்டாலினின் பெற்றோர் தந்தை, தாயும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ,இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். ஆகையால், ஜூவா ஸ்டாலின் ஆதி திராவிடர் இல்லை என்ற புகார்கள் எழுந்தது. நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது இதேபோன்று ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த விவகாம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்களும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் ஆத்தூர் தனித்தொகுதிக்கு வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். 


இதுதொடர்பா திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- சேலம் ஆத்தூர் தொகுதியில் ஜூவா ஸ்டாலினுக்கு பதிலாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னதுரை என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஜெயசங்கரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.