Asianet News TamilAsianet News Tamil

மொழிபெயர்ப்பு எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ க்கு சாகித்ய அகாடமி விருது !!

திருவண்ணாமலை மாவட்டம், கொளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கே.வி. ஜெயஸ்ரீ. எழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை மொழிபெயர்த்து தமிழில் எழுதியுள்ளார்.  இதற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Sagitta Academy Award for Translation Writer KV Jayasri
Author
Tamil Nadu, First Published Feb 26, 2020, 8:43 AM IST

T.Balamurukan

மொழிபெயர்ப்பு எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ க்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கொளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கே.வி. ஜெயஸ்ரீ. எழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை மொழிபெயர்த்து தமிழில் எழுதியுள்ளார்.  இதற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Sagitta Academy Award for Translation Writer KV Jayasri

தமிழில் சங்ககால இலங்கியங்களில் இடம்பெற்றிருந்த சங்ககால பாணர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை பற்றி விவரிக்கும் வகையில் அந்த நாவல் அமைந்துள்ளது.சாகித்ய அகாடமி விருது பெற்றதுபற்றி ஜெயஸ்ரீ மிகுந்த சந்தோசத்தில் இருக்குகிறார். 'சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  மொழிபெயர்ப்பு நாவல்களில் தனி கவனம் செலுத்தி வருகிறேன்.  கடந்த 20 வருடங்களாக மொழி பெயர்ப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்றார். இவரது மகள் சுகானாவும் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற ஜெயஸ்ரீக்கு முதல் அமைச்சர் பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios