முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் சோகமே வடிவாக காணப்பட்டது என்றும், 30 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளர் புகழேந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகியதும், புதிய முதலமைச்சரை டி.டி.வி.தினகரன் அறிவிப்பார் என கூறினார்.

முதலமைச்சர்  நடத்திய கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்றும் எம்எல்ஏக்களை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு தான் உள்ளது, ஆளுநரின் முடிவுக்காகவே அனைவரும் காத்திருக்கிறோம் என்று கூறினார்.

மேலும்  ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் இணைந்தது தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். பொதுக்குழு, செயற்குழுவை ஈபிஎஸ் கூட்ட முடியாது என்றும்  பொதுக்குழுவை பொதுச்செயலாளர்  சசிகலாதான் கூட்ட முடியும் எனவும் புகழேந்தி கூறினார்.

தங்கமணி, வேலுமணி, வீரமணி ஆகிய மணிகள் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் சோகமே வடிவாக காணப்பட்டது என்றும், 30 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டார்.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள்  அரைகுறை மனதுடன் கலந்து கொண்டதாக குறிப்பிட்ட புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியின் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.