பாஜக தலைமை மீது வருத்தத்தில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், தனது கோபம் பாஜகவை விட்டு விலகிச் செல்பவர்களுக்கு எதிரானது என்று அவர் புது விளக்கமளித்துள்ளார்.

பாஜகவில் மாநில தலைவர் பதவியை தராததால் கட்சி தலைமை மீது வருத்தத்தில் இருப்பதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக அல்லது அதிமுகவில் நயினார் நாகேந்திரன் இணைய வாய்ப்புள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன்!கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு  பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு!!

நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும் !! என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது என்றும் விளக்கமளித்துள்ளார்.