Asianet News TamilAsianet News Tamil

இந்து பெண்களின் தாலியை அசிங்கப்படுத்திய மங்கள்சூத்ரா விளம்பரம்... திரும்பப்பெற்றார் சப்யசாச்சி..!

உள்ளாடை அணிந்த பெண் தாலியுடன் ஒரு  ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தான் பிரச்னைக்கு காரணமே.

Sabyasachi withdraws controversial Mangalsutra campaign advertisement after backlash
Author
India, First Published Nov 2, 2021, 11:42 AM IST

மத்தியப் பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா "24 மணிநேர இறுதி எச்சரிக்கையை" விடுத்து, "காவல் படையை" அனுப்புவதாக மிரட்டியதையடுத்து, ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி தனது மங்களசூத்ரா விளம்பரம் திரும்பப்பட்டது.Sabyasachi withdraws controversial Mangalsutra campaign advertisement after backlash

"பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஒரு ஆற்றல்மிக்க உரையாடலாக மாற்றும் சூழலில், மங்கள்சூத்ரா பிரச்சாரம் உள்ளடக்குதல் மற்றும் அதிகாரமளித்தல் பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்டது. பிரச்சாரம் ஒரு கொண்டாட்டமாக இருந்தது, மாறாக அது நமது சமூகத்தின் ஒரு பிரிவினரை புண்படுத்தியதில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். சப்யசாச்சி பிரச்சாரத்தைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளார்" என்று வடிவமைப்பாளரின் நிறுவனம் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜியின் சமீபத்திய விளம்பர படம் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. புதுவகை மங்கள்சூத்ரா (தாலி) என அவர் அறிமுகம் செய்த விளம்பர பிரச்சாரம் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இது இந்து கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டினர். இதில் சிக்கல் என்னவென்றால் விளம்பர மாடல்கள் அணிந்திருந்த உடைதான் இங்க பிரச்னைக்கு காரணமாக அமைந்தது. உள்ளாடை அணிந்த பெண் தாலியுடன் ஒரு  ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தான் பிரச்னைக்கு காரணமே. இதுபோன்ற புகைப்படத்தை அவர் தவிர்த்து இருக்கலாம் என குரல்கள் வலுக்கத்தொடங்கியது.Sabyasachi withdraws controversial Mangalsutra campaign advertisement after backlash

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, மத்திய அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஊடகங்களிடம் கூறுகையில், "இதுபோன்ற விளம்பரங்கள் குறித்து நான் முன்பே எச்சரித்தேன். வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜியை தனிப்பட்ட முறையில் எச்சரிக்கிறேன், அவருக்கு 24 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆபாசமான விளம்பரத்தை திரும்பப் பெறாவிட்டால், அவர் மீது பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கைக்கு போலீஸ் படை அனுப்பப்படும்.

இந்து அடையாளங்களை வைத்து மட்டும் ஏன் இதுபோன்ற வேதனையான சம்பவங்கள் நடக்கின்றன? முகர்ஜிக்கு தைரியம் இருந்தால், வேறு ஏதாவது மதத்துடன் இதைச் செய்ய வேண்டும், அவர் உண்மையான துணிச்சலான மனிதர் என்பதை புரிந்துகொள்வோம்" என்று கூறினார்.

சப்யசாச்சியின் பிராண்டின் மங்களசூத்ரா விளம்பரத்தில் ஒரு பெண் கழுத்து நெக்லைன் ஆடை அணிந்து தனியாகவும், ஆணுடன் நெருக்கமாகவும் போஸ் கொடுப்பதைக் காட்டியது. மங்களசூத்திரம் என்பது திருமணமான இந்துப் பெண்கள் அணியும் நெக்லஸ் ஆகும். கடந்த வாரம், டாபர் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் ஃபெம் கிரீம் ப்ளீச் விளம்பரத்தை திரும்பப் பெற்றது. இது ஒரே பாலின ஜோடி கர்வா சௌத்தை கொண்டாடியது

Sabyasachi withdraws controversial Mangalsutra campaign advertisement after backlash

அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த விளம்பரத்தை ஆட்சேபனைக்குரியதாகக் கூறியதைத் தொடர்ந்து, நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இந்த விளம்பரத்தில் யாருடைய கண்களும் நீங்கள் அறிமுகம் செய்த நகைகளின் மீது இல்லை மாறாக நீங்கள் விளம்பரத்தில் பயன்படுத்திய பெண்கள் மீதுதான் இருக்கிறது என்ற பதிவுகளை சமூகவலைத்தளங்களில் அதிகம் காணமுடிந்தது. உங்களுக்கு தாலியை விளம்பரப்படுத்த வேறு யோசனைகள் தோன்றவில்லையா  என சிலர் சமூகவலைதளத்தில் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ தாலி என்றால் எப்படி இருக்க வேண்டும் என அவருக்கு பாடம் எடுக்கும்விதமாக புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios