திருச்சியில் கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருச்சியில் கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்தவர் யூடியூபர் சாட்டை துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணியை சேர்ந்தவர். இவர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி தவறாக பேசிவிட்டதாக, கூறிய கார் உதிரி பாக கடைக்காரரை அவரது கடைக்கே சென்று மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் ஆகிய நால்வரை திருச்சி கே.கே.நகர் போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடிவருகின்றனர்.

சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.