தேவர் ஐயா சிலையின் கீழ் கடவுளை நம்பாதவன் முட்டாள், காட்டுமிராண்டி, பரப்புபவன் மடயன்  என்று எழுதவும் உரிமையுள்ளது என எஸ்.வி.சேகர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை விமர்சித்து எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள தனது டவிட்டர் பதிவில், ’’கடவுள் மறுப்பு சொல்லு. ஆனால் ஆத்திகர்களை முட்டாள் அயோக்யன் காட்டுமிராண்டி என்று சொல்ல அரசியலமைப்புச்சட்டம் அனுமதி அளிக்கவில்லை. அது சரி என்றால், தேவர் ஐயா சிலையின் கீழ் கடவுளை நம்பாதவன் முட்டாள், காட்டுமிராண்டி, பரப்புபவன் மடயன்  என்று எழுதவும் உரிமையுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு பலர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ’’முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களை அடியாட்களாக மாற்ற முற்படுவது தான் இந்த பதிவின் நோக்கமாக இருக்கிறது! ஆனால் முக்குலத்தோர் இளைஞர்கள் எஸ்.வி.சேகர் போன்ற ஈன புத்தி கொண்ட பார்ப்பனர்களை உணர்ந்து தெளிவாக தான் இருக்கிறார்கள்!

பசும்பொன்தேவர் அய்யா பெயரை தங்கள் வியாக்யானங்களுக்கு பயன்படுத்தும் அளவுக்கு தங்கள் தகுதியை தாங்களே மேம்படுத்திக் கொண்டதை மன்னிக்க முடியாத குற்றமாகவே கருதுகிறேன். தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைப்பது சில சமயம் மூக்குடை  படுவதற்கும் வழி வகுத்துவிடும். எச்சரிக்கை! இங்க ரெஸ்லிங்கா நடக்குது பெரியாருக்கு போட்டியாக தேவரை இறக்கி விட. கடவுள் இல்லை என்பது அவர் கருத்து. கடவுள் இருக்கு என்பதை நிருபித்துவிட்டு எங்கே வேண்டுமானாலும் எழுந்துங்கள். 

அதை ஏன் முத்துராமலிங்கம் சிலைக்கு கீழ எழுதனும், உங்க பெருமாள் , சிலைக்கு கீழவும் எழுதலாமே? பெரியார் என்று சில மூடர்களால் போற்றப்படும் ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதரின் வெற்றுக் கூச்சல்களையும், போலித் தத்துவங்களையும், சந்தர்ப்பவாத அரசியலையும் உடைப்பதுவே தேசத்திற்கு நன்மை தரும்’’ என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

அவரது இந்தப்பதிவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ’’தீர்ப்பு விந்தையானது தான். நான் கடவுளை நம்புபவன். அது என் உரிமை. என்னை காட்டுமிராண்டி, முட்டாள் ‌என்பது அவர்கள் உரிமையானால் என் மதத்தையும், கடவுளையும் நம்பாதவர்களை நான் ‌எப்படி வேண்டுமானாலும் பழிப்பது என் உரிமை. அது சட்டத்திற்கு உட்பட்டதாகுமா? என்று தெரிவித்துள்ளனர்.