ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தன்னை விட 30 மடங்கு சிறிய நாட்டைப் பற்றி தவறாக குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.
உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும், இந்த போரில் ரஷ்யாவால் இன்னும் வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் ஒரு சில நாட்களில் ரஷ்ய இராணுவம் போரில் வெற்றி பெறும் என்று நம்பப்பட்டது, ஆனால் இந்த போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தாலும், தற்போது ரஷ்யா வெற்றிபெறும் நிலையில் இல்லை. உக்ரேனுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய இராணுவத்தின் திறன் மற்றும் படைபலம் ஆகிய இரண்டையும் குறித்தும் கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. இவ்வாறான நிலையில் ஒரு மாதம் கடந்தும் உக்ரைனில் நடந்த போரில் ரஷ்யா வெற்றி பெறாததற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்ப்போம்..
1. ரஷ்யாவின் இராணுவத்திற்கு குறைவான நிதி:
உலகின் வல்லரசு நாடாக ரஷ்யா உள்ளது. ஆனால் பாதுகாப்புக்கான செலவினங்களைப் பொறுத்தவரை, அது அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுக்குப் பின்னால் உள்ளது. பாதுகாப்புத் துறைக்கு குறைந்த செலவீனம் என்பது இராணுவத்தின் நவீனமயமாக்களுக்கு பெரும் தடையாக உள்ளது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) இன் அறிக்கையின்படி, 2021 இல் அமெரிக்காதான் உலகிலேயே அதிக பாதுகாப்பு பட்ஜெட்டைக் கொண்ட நாடாக உள்ளது, இது 2021 இல் இராணுவத்திற்காக $778 பில்லியன் செலவழித்தது.
இரண்டாவது இடத்தில் சீனா, 253 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காக செலவிட்டது. ராணுவத்திற்காக 72.9 பில்லியன் டாலர் செலவழித்த இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில், இராணுவத்திற்கான செலவினங்களின் அடிப்படையில் ரஷ்யா நான்காவது இடத்தைப் பிடித்தது, அது தனது இராணுவத்திற்காக $ 61.7 பில்லியன் செலவழித்தது. ரஷ்யா வல்லரசு என்ற பெயரை வைத்துக்கொண்டு, உக்ரைன் போன்ற ஒரு சிறிய நாட்டை கூட வெல்ல முடியாமல் போராடுகிறது என்றால் தனது பலத்தை மேம்படுத்திக் கொள்ள அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

2. உக்ரைனுடனான வான் போரில் ரஷ்ய விமானப்படையால் வெற்றிபெற முடியவில்லை:
போர் தொடங்கி ஒரு மாதம் ஆன பிறகும், வி.கே.எஸ் எனப்படும் ரஷ்ய விண்வெளிப் படையால் உக்ரைனின் வான்வெளியில் தனது பராக்கிரமத்தை நிரூபிக்க முடியவில்லை. கடந்த பல 10 ஆண்டுகளாக உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றான சுகோய் -30, சுகோய் -35 மற்றும் சுகோய் -34 போன்ற போர் விமானங்களுக்காக ரஷ்யா தனது விமான திறனை அதிகரிக்க பல பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. ஆனால் இதில் கேள்வி என்னவென்றால், ரஷ்ய இராணுவத்தால் உக்ரைனின் வானத்தில் ஏன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை?நிபுணர்களின் கூற்றுப்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் வெற்றிபெற ரஷ்ய விமானப்படை தேவையில்லை என்று புடின் கருதினார். அதே நேரத்தில், ரஷ்யா தனது விமானங்கள் மற்றும் விமானிகளுக்கு அதிக சேதம் ஏற்படுவதை விரும்பவில்லை.
ரஷ்யா தனது விமானப்படையை போதுமான அளவுக்கு பயன்படுத்தவில்லை, துருக்கியில் தயாரிக்கப்பட்ட TB-2 போன்ற ட்ரோன்கள் உதவியுடன் உக்ரேனிய விமானப்படை மற்றும் விமான பாதுகாப்புக்கு பலமாக பதிலடி கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பல ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் டாங்கிகளை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது. ரஷ்ய விமானிகள் எதிரிநாட்டு வீரர்களை காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் குறைவான பறக்கும் நேரத்தை கெண்டுள்ளனர் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதனால்தான் ரஷ்ய விமானப் படை எண்ணிக்கையில் வலிமையாக இருப்பதைப் போல போர்க்களத்தில் வலுவாக்க போராட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

3. ரஷ்யாவின் திட்டமிடல் மற்றும் இராணுவ பயிற்சியின்மை:
உக்ரைனுக்கு எதிரான போரின் தொடக்கத்திலிருந்து, ரஷ்ய இராணுவத்தின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று, போதிய திட்டமிடல் இல்லாதது. போர் தொடங்கிய பிறகும், ரஷ்யப் படைகள் எங்கு செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு சரியாக வழிகாட்டுதல் இல்லை என்றும், அதனால்தான் முதல் வாய்ப்பு கிடைத்தவுடனேயே அவர்கள் சரணடை நேரிட்டது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின்படி, உக்ரைனுக்கு எதிரான போரின் முதல் இரண்டு வாரங்களில், ரஷ்யாவின் 5-6 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதாவது, ஒவ்வொரு நாளும் சுமார் 400 வீரர்கள் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.1945க்குப் பிறகு உலகில் எங்கும் ரஷ்ய ராணுவம் இவ்வளவு சேதத்தை சந்தித்ததில்லை. ஆப்கானிஸ்தானுடனான சோவியத்-ரஷ்ய போரின் போது கூட, ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 ரஷ்ய வீரர்கள் மட்டுமே இறந்தனர்.
நியூயார்க் டைம்ஸ் கணிப்பின்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஒரு மாதத்திற்குள் 7000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான அமெரிக்காவின் போரில் கொல்லப்பட்ட மொத்த வீரர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகம். போரின் ஆரம்ப நாட்களில், உக்ரைனுக்குள் நுழையும் பாதை, படையின் நோக்கங்கள், இலக்குகள் மற்றும் துருப்புக்களின் பொறுப்புகள் போன்ற முறையாக தெரிவிக்கப்படவில்லை. மேலும் ரஷ்ய இராணுவம் உண்மையிலேயே ஒரு நீண்ட போருக்கு முழுமையாக தயாராகவில்லை இதனால் ரஷ்ய வீரர்கள் ஒரே நேரத்தில் பல முனைகளில் சிக்கிக்கொண்டனர்.

4. புடின் உக்ரைனை குறைத்து மதிப்பிட்டாரா?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தன்னை விட 30 மடங்கு சிறிய நாட்டைப் பற்றி தவறாக குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர். உக்ரைன் ராணுவத்திடம் இருந்து தனது வீரர்களுக்கு இவ்வளவு கடுமையான போட்டி வரும் என்று புடின் எதிர்பார்க்கவில்லை.
சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களில் உக்ரைனை தனது இராணுவம் ஆக்கிரமித்துவிடும் என்று புடின் தவறாக நம்பினார், ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகும் அது நடக்கவில்லை, இது எப்போது நடக்கும் என்றும் கூற முடியாது. உக்ரைனில் 8 மில்லியன் மக்கள் ரஷ்ய வம்சா வளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், போர் வெடித்தபோது ரஷ்ய துருப்புக்களை வரவேற்பார்கள் என்று புடின் நம்பினார், கார்கிவ் மற்றும் ஒடேஷா போன்ற நகரங்கள் முதலில் சரணடையும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு மாறாக ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன
