Asianet News TamilAsianet News Tamil

கொலை மிரட்டல் விடும் ஆளும் கட்சிகாரர்கள்; அமைதி காக்கும் அரசு - இது ரொம்ப தப்புங்க என்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்...

ruling parties threatening Government keeping silent Its Very wrong says Actor Prakashraj
ruling parties threatening Government keeping silent Its Very wrong says Actor Prakashraj
Author
First Published Nov 23, 2017, 8:49 AM IST


கோயம்புத்தூர்

பத்மாவதி திரைப்படத்தில் நடித்தவர்களுக்கு ஆளும் கட்சிகாரர்கள் கொலை மிரட்டல் விடுகிறார்கள். அரசு அமைதி காக்கிறது. இது தவறு என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சுட்டிக் காட்டியுள்ளார்.


கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சென்னை செல்வதற்காக கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "சினிமா தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை வருத்தமளிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இவருடைய தற்கொலை திரையுலகம் எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற முடிவை யாரும் எடுக்கக் கூடாது. இதுபோன்ற பல தற்கொலைகள் சினிமா துறையில் நடந்திருக்கின்றன.

தயாரிப்பாளருக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தையும், எங்களையும் வந்து அணுகலாம்.

நடிகர்கள் கருப்பு பணம் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் வரி செலுத்தியும் பாதுகாப்பில்லாத துறையாக இந்த சினிமாத்துறை இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

திருட்டு வி.சி.டி.க்களை ஒழிக்க வேண்டும். மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பத்மாவதி திரைப்படத்தில் நடித்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும், அதுவும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் நாம் எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அரசு அமைதி காப்பது தவறு.

தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று எண்ணி கமல்ஹாசனும், ரஜினியும் அரசியலுக்கு வரலாம். ஆனால் வரும்போது வருவார்கள்.

கமல்ஹாசன் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றால் அதற்கு அமைச்சர்கள் ஆதாரத்தை தர வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமாக சந்திக்கட்டும். அதைவிட்டு விட்டு மிரட்டும் வகையில் பேசக்கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios