காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்..! ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி அறிவிப்பு
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வன்முறை சம்பவங்களை ஏற்படுத்திய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரனை தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். இதனையடுத்து இந்த பிரச்சனைக்கு காரணமான சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு பிறகு தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது மீண்டும் நிரூபணம்.. காயத்ரிக்கு ஆதரவாக ஜோதிமணி..!
இது தொடர்பாக ஒழங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி, ரூபி மனோகரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் காலாவகாசம் கேட்டும் மற்றும் உங்கள் கருத்துக்களை குறிப்பிட்டும் தாங்கள் அனுப்பிய கடிதத்தை கிடைக்கப்பெற்றோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் ஏற்கக்கூடியது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவெடுத்துள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உ உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுவரை தாங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவிக்கிறது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- என்ன செய்தாலும் தமிழக மக்கள் மனதில் பாஜக இடம் பிடிக்க முடியாது... கார்த்தி சிதம்பரம் பரபரப்பு கருத்து!!