தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகிளில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டியில் திமுக கூட்டணி சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாங்குனேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணன் போட்டியிடுகிறார். நீண்ட இழுபறிக்குப் பின்பு தற்போது காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார்.