Asianet News TamilAsianet News Tamil

இந்திய அரசு உயர்பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்..? முன்னாள் முதல்வர் சர்ச்சைப்பேச்சு..!

கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது

RSS in the top echelons of the Indian government ..? Former Chief Minister controversy
Author
Karnataka, First Published Oct 6, 2021, 12:45 PM IST

இந்தியாவில் அரசு அலுவலகங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என கர்நாடக முன்னால் முதல்வர் குமாரசாமி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜனாத தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி இது குறித்து பேசுகையில், “நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஆட்சி பணியில் அந்த அமைப்பை சேர்ந்த 4,000 பேர் சேர்ந்துள்ளனர். RSS in the top echelons of the Indian government ..? Former Chief Minister controversy

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது” எனக்கூறினார். இந்நிலையில், இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ள அவர், ‘’நான் எந்த கட்சி குறித்தோ அல்லது அமைப்புகள் குறித்தோ தவறாக பேசவில்லை. கொரோனா ஊரடங்கு நேரத்தில் நான் பல்வேறு புத்தகங்களை படித்தேன். வரலாற்று அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தேன். அந்த புத்தகங்களில் கூறியுள்ள சில தகவல்களை தான் நான் கூறினேன்”என அவர் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios