Asianet News TamilAsianet News Tamil

நாய்கள் கூட்டமாக படையெடுத்தால் சிங்கத்தையும் ஜெயிக்க முடியும்! ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சால் பரபரப்பு!

காட்டுக்கே ராஜாவான ஒரு சிங்கத்தை சில நாய்கள் கூட்டமாக வந்து வெற்றி பெற்றுவிடக்கூடும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

RSS chief Controversial speech
Author
USA, First Published Sep 9, 2018, 3:37 PM IST

அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் உலக இந்துக்களின் பேராயம் எனும் 2வது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்று பேசினார். அப்போது, இந்து மக்கள் ஒரு சமுதாயமாக ஒருங்கிணைந்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். ஆனால் இந்துக்களை ஒன்றாக்குவது என்பது மிகவும் சிரமம். ஏனென்றால் இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் காரியதரிஷிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
  
ஆனால் சிங்கம் எப்போதும் கூட்டமாக இருக்காது என்று கூறி ஒற்றுமையாக செயல்பட சில இந்துக்கள் தயங்கினர். ஆனால் இந்துக்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். காட்டுக்கே சிங்கம் ராஜா. இதே போல் வங்கப் புலியை தனியாக சென்று யாராலும் ஜெயிக்க முடியாது. ஆனால் சில நாய்கள் கூட்டமாக படையெடுத்து வந்து சிங்கத்தையும் ஜெயிக்க முடியும், வங்கப் புலியையும் வீழ்த்த முடியும்.
  
எனவே இந்துகள்ள ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மோகன் பகவத் கூறியுள்ளார். இதனிடையே மோகன் பகவத் இந்து மதத்தை புகழ்வதாக கருதிக் கொண்டு வேறு மதங்களை இழிவுபடுத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது. 

இந்து மதத்தை சிங்கத்துடன் ஒப்பிட்டுள்ள மோகன் பகபவத் வேறு மதங்களை நாயுடுன் ஒப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதாவது வேறு மதங்கள் ஒன்று சேர்ந்து வரும் போது இந்து மதம் அழிந்துவிடும் என்று கூறியுள்ள மோகன் பகவத் அதற்கு உவமையாக சிங்கம் மற்றும் நாய்களை பயன்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios