RSS BJP supports Rajinikanth EVKS Elangovan
நடிகர் ரஜினிகாந்த்துக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பக்கபலமாக இருப்பதாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் வரும் பிரதமருக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கருப்புக்கொடி காட்டும் என்றார்.
தலித் மக்களுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். அநீதி இழைக்கின்றன ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டினார். தலித் மக்களுக்கு காங்கிரஸ் மட்டும்தான் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் ரஜினிக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பக்கபலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே ரஜினிக்குப் பின்னால் பாஜக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
