Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை நிச்சயம்..! அடித்து சொல்லும் ஆர்.எஸ் பாரதி

திமுக நிர்வாகிகள் மீது அவதூறு கருத்துகளை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒரு வருட சிறை தண்டனை கிடைக்கும் என அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதிபட தெரிவித்துள்ளார்.

RS Bharti has said that Annamalai will get a one year jail term in the defamation case
Author
First Published May 12, 2023, 12:28 PM IST

திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியல்

திமுக - பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்க ஏற்பட்டு வரும்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுகவினர் ஊழல் மற்றும் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார். திமுக பைல்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி மாறன், கலாநாதி மாறன், கன்மொழி, டிஆர் பாலு உள்ளிட்ட 17 பேரின் சொத்து மதிப்பு 1லட்சத்து 50ஆயிரம் கோடி என தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி, கனிமொழி, டிஆர் பாலு உள்ளிட்டவர்கள் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருந்தனர்.

ஓபிஎஸ் உடன் மோதலா..! டிடிவி தினகரனை சந்தித்ததில் எனக்கு விருப்பம் இல்லையா.? இபிஎஸ்யை விளாசும் வைத்தியலிங்கம்

RS Bharti has said that Annamalai will get a one year jail term in the defamation case

அண்ணாமலை மீது முதல்வர் வழக்கு

ஆனால் தாம் மன்னிப்பு கேட்க முடியாது சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயார் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும்,  புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

RS Bharti has said that Annamalai will get a one year jail term in the defamation case

அடுத்தடுத்து களம் இறங்கும் திமுக

இதனையடுத்து இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், திமுக பொருளாளர் டிஆர் பாலு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை அண்ணாமலை கூறியதாக தெரிவித்துள்ளார். எனவே அண்ணாமலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்ததாகவும். தற்போது திமுக பொருளாளர் டிஆர் பாலு வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

RS Bharti has said that Annamalai will get a one year jail term in the defamation case

அண்ணாமலைக்கு சிறை தண்டனை.?

திமுக தொடர்ந்த அனைத்து அவதூறு வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்பது வரலாறு என குறிப்பிட்டார். திமுக பொய்யாக எப்போதும் வழக்கு தொடராது என தெரிவித்தவர், 1962ஆம் ஆண்டு அப்போது திமுக பொருளாளராக இருந்த கருணாநிதி மீது புகார் கூறப்பட்டது. கருணாநிதி திமுகவின் பொருளாளர் பதவியில் இருப்பதால் அந்த பணத்தை எடுத்து பூம்புகார் என்ற படம் எடுத்ததாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நாத்திகம் ராமசாமிக்கு ஒரு ஆண்டு ண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதே போன்று தற்போது அண்ணாமலைக்கும் ஒரு ஆண்டு தண்டனை கிடைக்கும் என ஆர்எஸ் பாரதி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலை மீது வழக்கு..! உரிய தண்டனை வழங்கிடுக- இறங்கி அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

Follow Us:
Download App:
  • android
  • ios