தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவும், எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இது அரசியல் கட்சி தலைவர்களிடையே கருத்து மோதல்களை உருவாக்கி உள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் சர்ச்சைக்குரிய பேச்சால், தற்போது அவரே அந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி, நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதியால் டாக்டரான தமிழிசை சௌந்தரராஜன் தற்போது நீட் எழுதுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதேபோல், நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் பிதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நீட் தேர்வு எழுதத் தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் ஆர்.எஸ். பாரதி கூறினார்.