மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிலையில் அவரின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களும் வெளியாகியுள்ளது
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிலையில் அவரின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களும் வெளியாகியுள்ளது
மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக அதிமுக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேட்பாளர்கள் அளித்த பிரமாண பத்திரத்தில் அவர்களின் அசையும் அசையா சொத்துக்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அதில் தஞ்சையை சேர்ந்த திமுக வேட்பாளர் எஸ். கல்யாணசுந்தரத்தின் பிரமாண பத்திரத்தில் அவரின் பெயரில் 43.46 லட்சம் மதிப்புடைய அசையும் சொத்துக்களும் அவரது மனைவிகளின் பெயரில் 113 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் 67.76 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கல்யாண சுந்தரத்தின் பெயரில் 3.46 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும், மனைவிகளின் பெயரில் 2.39 கோடி மதிப்புடைய அசையா சொத்துக்களும், மனைவி பெயரில் 1.04 கோடி மதிப்புடைய அசையும் சொத்துக்களும், மற்றொரு மனைவியின் பெயரில் 39.47 லட்சம் மதிப்புடைய அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திமுகவின் மற்றொரு வேட்பாளர் கிரிராஜன் பெயரில் 3.17 கோடி மதிப்பு கடன் இருப்பதாகவும் அதே நேரத்தில் மனைவியின் பெயரில் 2.87 கோடி மதிப்பு கடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு வேட்பாளரான கே.ஆர்.என் ராஜேஷ்குமார் பெயரில் 17.15 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும், 78.08 மதிப்பில் அசையா சொத்துக்களும், மனைவியின் பெயரில் 74.47 லட்சம் மதிப்பில் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ப. சிதம்பரத்தின் பெயரில் 76.46 லட்சம் கடன் உள்ளதாகவும், 32 கிராம் தங்கம் 3.25 கேரட் வைரம் உட்பட 135 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளது என்றும், பரம்பரை சொத்து 5.83 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் அவரது மனைவி பெயரில் 1.457 கிராம் தங்கம் 76.71 கேரட் வைரம் உட்பட 17.39 கோடி அசையும் சொத்து 5 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பிரிக்கப்படாத குடும்பச் சொத்து அடிப்படையில் 4.59 லட்சம் அசையும் சொத்து, 12.21 கோடி அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மனைவி பெயரில் 27.22 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்து, 2.10 கோடி மதிப்பு அசையா சொத்து, ரூபாய் 61.84 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்து ஆகியவை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக வேட்பாளர் தர்மர் பெயரில் 14.49 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, 62.37 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் 17.09 மதிப்புள்ள அசையா சொத்து, மகள்கள் பெயரில் 36.05 லட்சம் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
