Asianet News TamilAsianet News Tamil

நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் மத்திய அரசு... ப.சிதம்பரம் கொந்தளிப்பு..!

மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது.

rs 20 lakh crore economic package...chidambaram tweet
Author
Tamil Nadu, First Published May 14, 2020, 2:09 PM IST

மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் 20 லட்சம் கோடிக்கான சிறப்புத் திட்டங்களை முதற்கட்டமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பில் சிறு, குறு தொழிற்துறையினர்களுக்கு கடனுதவி, வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு, டிடிதொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 

rs 20 lakh crore economic package...chidambaram tweet

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ரூ 20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள்.

 

மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது. இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது என ப.சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios