வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்ப வழங்கிக் கணக்கில் தலா ரூ.2000 டெபாசிட் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உள்ள ஏழை தொழிலாளர்கள் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ஆயிரம் நிதி வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்து இருந்தார். கிராமப் பகுதிகளில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் நகர்புறங்களில் வாழும் 25 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் இதற்காக 1200 கோடி ரூபாய் 2018- 19 துணை மாணியக் கோரிக்கை நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இந்த பணம் கட்சி பாகுபாடின்றி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை இந்த நிதி எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், இம்மாதம் இறுதிக்குள் ஏழைத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.