Asianet News TamilAsianet News Tamil

இனி நம்ம கிராமசாலைகள் பளபளனு மின்னப்போகுது... ரூ.1200 கோடி ஒதுக்கி எடப்பாடி அதிரடி..!

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் என்கிற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Rs.1200 crores allocated for village roads
Author
Tamil Nadu, First Published Jul 10, 2019, 1:05 PM IST

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் என்கிற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர், கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியது. முதலில் கேள்வி நேரம் நடைபெற்றது. இதையடுத்து சமூக நலம், சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

Rs.1200 crores allocated for village roads

இந்நிலையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் புதிதாக மூன்று சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்காக ரூ.9.58 கோடி ஒதுக்கப்படும். இந்த கல்லூரிகள் வரும் 2019-20 கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிக்கு ரூ.7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

 Rs.1200 crores allocated for village roads

ரூ.318 கோடி செலவில் 10,000 தடுப்பணைகள், ரூ.1,200 கோடி மதிப்பில் ஊரக சீரமைப்பு போன்றவை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.  ஏற்கனவே இருக்கும் சட்டக் கல்லூரிகள் உள்ள மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Rs.1200 crores allocated for village roads

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதற்கான சேர்க்கை நடைபெற்று, கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios