லாட்டரி மார்ட்டின் ரூ.5 கோடி, டிவிஎஸ் ரூ.1  ஒரு கோடி, சரவணா ஸ்டார் அண்ணாச்சி ரூ.1 கோடி என, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக பல கோடிகளை வாரி வழங்கி வருகின்றனர் பிரபல தொழிலதிபர்கள்.

தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் சுமார் பல லட்சம் கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் யானை பசிக்கு சோளப்பொரி போல, மத்திய அரசு வெறும் ரூ. 200 கோடி மட்டுமே நிவாரண நிதியாக ஒதுக்கி உள்ளது.

ஆனால் இன்னும் பல நூறு கோடி ரூபாய் நிவாரணத்திற்கு தேவைப்படும் நிலையில் சிறு சிறு தொகையையே பலரும் நிதியாக அளித்து வருகின்றனர்.

கேரள, வெள்ள சேதத்திற்கு அந்த மாநிலத்தை சேர்ந்த பல தொழிலதிபர்கள், பல்லாயிரம் கோடிகளை கொட்டி கொடுத்தனர். பல வெளிநாட்டு நிதிகளும் வந்து குவிந்தது. ஆனால் நமது தமிழகத்தின் ஏழு  மாவட்ட பாதிப்பிற்கு இதுவரை 25 சதவீத நிதி கூட சேரவில்லை.

இந்நிலையில் ஆளும் கட்சியான அதிமுக, கஜா புயல் நிவாரண நிதிக்காக வெறும்  ரூ. 1  கோடி மட்டுமே கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்களை அனுப்பப்பட்டு வந்தாலும் கூட கட்சி சார்பில் எவ்வளவு நிதி உதவி அளிக்க போகிறார்கள் என்பதே பலரது எதிப்பார்ப்பாக இருந்தது. 

ஏற்கனவே, பலநூறு கோடி ரூபாய் நிவாரணமாக நிதி உதவி தேவைப்படும் நிலையில், தமிழக அரசு இந்த பிரச்னையை எப்படி சமாளிக்க போகிறதோ என்கிற கவலை தற்போது எழுந்துள்ளது.