Asianet News TamilAsianet News Tamil

ஆந்திர மாநில சபாநாயகராகிறார் நடிகை ரோஜா ! ஜெகன் மோகன் அதிரடி !!

ஆந்திர மாநிலத்தில் ஜெகம் மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள் உட்பட  25 பேர் அமைச்சர்களாக  பதவி ஏற்றுக் கொண்ட  நிலையில் நடிகை ரோஜாவுக்கு  சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

roja will be the speaker of andra
Author
Hyderabad, First Published Jun 8, 2019, 8:37 PM IST

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.. கடந்த மாதம் 30-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக  பதவியேற்றார். ஆனால் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

roja will be the speaker of andra

ஒரு வாரமாக அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் அளிக்கலாம் என்பது குறித்து முக்கிய தலைவர்களுடன் ஜெகன் ஆலோசித்து வந்தார். இந்நிலையில், ஜெகனின் அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர்கள்  இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி, பி.சி, சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகம் ஆகிய சமூகத்தில் இருந்து ஒருவர் என்று 5 பேர் துணை முதல்வர்களாக இடம் பெற உள்ளனர். 5 துணை முதல்வர்கள் இன்று பதவியேற்றனர்.

roja will be the speaker of andra

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 25 அமைச்சர்களுக்கும் ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்றியமைக்கவும் ஜெகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே நகரி தொகுதியில் வெற்றி பெற்ற  நடிகை ரோஜா அமைச்சராவார் என கூறபட்டது. ஆனால் அவர் அமைச்சராக பதவி ஏற்கவில்லை அதனால் அவருக்கு சபாநாயகராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

roja will be the speaker of andra

அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை முறைப்படி அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு ஜெகன் மோகன் முதமைச்சராக  பொறுப்பேற்றார். 

roja will be the speaker of andra

முன்னதாக அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெகனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து தலைமை செயலக அதிகாரிகள், ஊழியர்கள் வரிசையில் நின்று ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios