r.k.nagar election...vote counting will start by 8 o clock

கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் முடிவுகள் கிடைத்துவிடும். திமுக,அதிமுக மற்றும் டிடிவி தினகரனிடையே நிலவி வந்த கடும்போட்டியில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பது தெரியவரும்.

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்த நிலையில் அவரது தொகுதியான ஆா்.கே.நகா் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுகவில் மருதுகணேசும் போட்டியிடுகின்றனர். தமிழக பாஜக சரு.நாகராஜனையும், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயத்தையும் வேட்பாளர்களாக நிறுத்தியிருந்ததது. இசர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் வகையில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். ஆனால் ஆா்.கே.நகா் தொகுதியில் 4 தபால் ஓட்டுகள் மட்டும் தான் வந்துள்ளது என்பதால் சில நிமிடங்களிலேயே மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கிவிடும்.

14 மேஜைகள் அமைக்கப்பட்டு 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப் பதிவு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரிக்கு பலத்த காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளா்களின் முகவா்கள், செய்தியாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நில மணி நேரத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும். ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பும், பின்பும் கருத்துக் கணிப்பிகள் வெளியிடப்பட்டன.

இந்தக் கருத்துக் கணிப்பில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது இடத்தில் மருது கணேசும், மூன்றாவது இடத்தில்தான் ஆளும் அதிமுகவின் மதுசூதனனும் உள்ளனர் என்று இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இங்கு டிடிவி.தினகரன் வெற்றி பெற்றால், இடைத் தேர்தலில் ஆளும்கட்சிதான் வெற்றிபெறும் என்ற வாடிக்கை நடைமுறை தோற்கடிக்கப்படும் என சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.