ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் அ.தி.மு.க - தினகரன் தரப்பினரிடையே மோதல் நடந்ததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைத்தலைவர் டிடிவி தினகரன் இன்று சென்னை தண்டையார்பேட்டைக்கு வருகை தந்தார். அப்பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க தினகரன் வந்துள்ளார். அவர் வருகைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலர் தினகரன் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் திரண்டனர்.இதனால் தினகரன் ஆதரவாளர்கள், அ.தி.மு.கவினர் கல்வீச்சு தாக்கிக் கொண்டனர்.  பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியில் விரைந்த போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.