RK DMK victory in the constituency in the state Congress chief Tirunavukkarasar said to be bright.

ஆர்.கே. நகர் தொகுதியில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே. நகர் தொகுதியில் கடந்த முறை கூட்டணி கட்சியான திமுக போட்டியிட்டது. அதிமுக 3 அணிகளாக பிரிந்து இருப்பதால், இந்த இடை தேர்தலில், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்த
தேர்தலில், பணப்பட்டுவாடா இல்லாமல் நடத்த தேர்தல் கமிஷன் முயற்சிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலையும், விரைவில் நடத்த தேர்தல் கமிஷனும், தமிழக அரசும் முன்வர வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் குடும்பத்தினரை சந்தித்து பேசினேன். கடந்த முறை பேசிய பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு பின்பற்றவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக
மீனவர்களிடம் இருந்து 135 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. அதில், ஒரு படகு இதுவரை இந்திய அரசு மீட்கவில்லை. தமிழக மீனவர் கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அல்லது மூத்த மத்திய அமைச்சர்கள் வர வேண்டும் என போராட்டத்தில் உள்ள மக்கள் உறுதியாக கூறுகின்றனர். மீனவரை சுட்டு கொன்ற இலங்கை
கடற்படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்த மீனவர் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் வழங் கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ரூ.25 லட்சமும், இலங்கை அரசிடமிருந்து ரூ.1 கோடியையும் அந்த குடும்பத்துக்கு நஷ்டஈடாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைகளை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred