மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன்; விமானி அபிநந்தன் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலில் 300 பேரை கொன்றது குறித்த ஆதாரம் இதுவரை வெளியிடப்படவில்லை. புல்வாமா போன்ற நிகழ்வுகள் மத்திய அரசின் திட்டமிட்ட சதியா, இயற்கையானதா என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சமூகவலைத்தளங்களில் கூட கேள்விகளும் அதையே சொல்கின்றன.

மோடிக்கு பின்னால் தமிழக மக்கள் இல்லை. ஈபிஎஸ் உள்ளிட்ட 330 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த கால அனுபவங்களில் மத்திய அரசுகளால் தமிழகத்திற்கு உதவும் கிடைக்கவில்லை. 

பதவியை காப்பாற்றி கொள்வதற்காக ஈழ தமிழர்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக கண்டுகொள்ள வில்லை. தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க வில்லை என்பதற்காக தமிழகம் இந்தியாவில் தான் உள்ளது என்ற நிலையை மறந்து மத்திய அரசுகள் செயல்பட்டுவருகிறது. 

அதனால் மாநில கட்சிகள் தனியாக நின்று வெற்றி பெற்று தமிழகத்தின் உரிமைகளை கேட்டுபெறும் நிலையை உருவாக்க வேண்டும்.  விசுவாசமான அதிமுக தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களிடம் உள்ளனர். பிஜேபி, பாமக ஆகிய ஜெயலலிதா விரும்பாத கட்சிகளோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் தனித்து தான் போட்டியிட உள்ளோம், நிச்சயமா ஜெயிப்போம். 

மீடியா பார்வையில் நாங்க சின்ன கட்சியா இருந்தாலும் விரலுக்கேத்த வீக்கமாக நாங்க சின்ன கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளோம். RKநகர் முடிவு தான் வெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். அமமுக வெற்றி பெறும். கூட்டணிகளை பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணியில் உள்ள கட்சிகளின் பலன் என்னவென்று தெரியும். கடந்த காலங்களில் அவர்களுடையை கூட்டணியின் நிலை என்ன ஆனது என மக்களுக்கு புரியும் எனக் கூறினார்.