R.J.Balaji in twitter
வெட்கம் கெட்ட எம்எல்ஏக்கள்… போட்டுத் தாக்கும் ஆர்.ஜே.பாலாஜி …
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தும், சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தும் வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அந்த எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்குள் சொல்லும்போது பொது மக்கள் கறுப்புக் கொடி காட்டியும், விரட்டியடித்தும் வருகின்றனர். அவர்கள் பேசும் கடும் சொற்களுக்கு அஞ்சி ஏராளமான எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த தொகுதிக்குள் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதை தனது டுவிட்டர் பக்கத்திலும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அதில் வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம் உள்ள சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட போது, ஏண்டா கேவலமாக இப்படி அடுச்சுக்கிறீங்க என வாய் தவறி பதற்றத்தில் கூறினேன். அதுவும் மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஆனல் அதற்கே ஏராளமானோர் என்னை திட்டினார்கள். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, வருத்தப்பட்டேன் என கூறியுள்ளார்.
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு எம்எல்ஏவையும், ஒவ்வொரு அரசியல்வாதியையும் ஊரே திரண்டு வந்து திட்டுது, நாடே திட்டுது, கேவலப்படுத்துது, அசிங்கப்படுத்துது.
ஆனால் அதையும் மீறி எம்எல்ஏக்கள் தொகுதிக்குள் போகிறார்கள். இவங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜியின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
