Asianet News TamilAsianet News Tamil

எங்களுக்கு வெட்டிய குழியில் நாங்கள் மட்டும் விழப்போதில்லை.. நீங்களும் விழப்போகிறீர்கள்.. எச்சரிக்கும் ராமதாஸ்

சமூகநீதிக்கு எதிரானவர்கள் எதையெல்லாம் கூறினார்களோ, சமூகநீதிக்கு எதிரான சக்திகள் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அவை தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆணையில் இடம் பெற்றுள்ளன. 

Risk to all reservations.. Ramadoss Shock information
Author
Tamil Nadu, First Published Nov 5, 2021, 1:03 PM IST

சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில்  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் வீழ்த்தப்படவில்லை.... எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில் தான் உள்ளன என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்த இட ஒதுக்கீட்டை தங்களின் முன்னேற்றத்திற்காக நம்பியிருந்த பாட்டாளி  மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.  ஆனால், உண்மை என்பது..... ஒட்டுமொத்த தமிழகத்தின் சமூகநீதிக்கும் இது குறித்த  உயர்நீதிமன்றத் தீர்ப்பு உலை வைத்திருக்கிறது என்பது தான்.

Risk to all reservations.. Ramadoss Shock information

வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10.50% இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள 7 வினாக்களையும், அவற்றின் அடிப்படையில் உயர்நீதிமன்றம்  தீர்ப்பில் விவரித்துள்ள அம்சங்களையும், எந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைத்தாலும், அந்த இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாது என்பது தான் உண்மை. இப்படிக் கூறுவதால் அந்த வினாக்கள்  நுணுக்கமான, கூர்மையான சட்ட ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவை அனைத்தும் கடந்த காலங்களில்  விரிவாக விவாதிக்கப்பட்டு, விடை காணப்பட்டவை தான். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவற்றுக்கு முன்வைக்கப்பட்ட விடைகள் அனைத்தையும் ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல், வினாக்களை மட்டும் முன்னிறுத்தி, அவற்றை மட்டுமே பிரமாண்டப்படுத்தி சமூகநீதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன்.... இந்த வினாக்கள் நீதி வழங்குவதற்காக  எழுப்பப்பட்ட வினாக்கள் அல்ல... மாறாக, தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு முடிவு கட்டுவதற்காக முன்வைக்கப்பட்டவை.

Risk to all reservations.. Ramadoss Shock information

இந்தியாவில் தமிழ்நாடு தான் சமூகநீதியின் தொட்டில் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், சமூகநீதிக்கு எதிரான சக்திகளும் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் இருக்கின்றன. அவை அவ்வப்போது தங்களின் தலையை தூக்கி ஆட்டம் போடும்... ஆனால், அந்த சக்திகளுக்கு ஆரம்பத்தில்  வெற்றி கிடைப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் நீதிமன்றங்களும், சட்டமியற்றும் மன்றங்களும் இணைந்து அந்த சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கின்றன. 1950, 1994 என தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றை சீர்த்தூக்கிப் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாக புரியும். அதே போன்ற ஒரு சமூகநீதி நெருக்கடி தான் தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதுவும் முறியடிக்கப்படும்.

சமூகநீதிக்கு எதிரானவர்கள் எதையெல்லாம் கூறினார்களோ, சமூகநீதிக்கு எதிரான சக்திகள் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அவை தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆணையில் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.50% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும்  ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 1994-ஆம் ஆண்டின் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தி தான் இத்தகைய உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும் கூறவில்லை... உச்சநீதிமன்றமும் ஒருபோதும் கூறவில்லை. 

Risk to all reservations.. Ramadoss Shock information

 ஆனால், 1994-ஆம் ஆண்டின் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்து, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தான் உள் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த நிலைப்பாடு  இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகளின் நிலைப்பாடு. அதே நிலைப்பாட்டை சென்னை உயர்நீதிமன்றமும் எடுத்திருப்பதால் இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியர்களின் உள் ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 1994-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு 16 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு 2010-ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. 69% இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அதற்கான புள்ளிவிவரங்களை ஓராண்டில் தாக்கல் செய்ய  வேண்டும் என ஆணையிட்டது.  அதன்படி  தமிழக அரசும் அம்பாசங்கர் ஆணைய அறிக்கை அடிப்படையிலான புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது.  ஆனால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை  நடைமுறைப்படுத்துவதற்கான மக்கள்தொகை விவரங்களே இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது அந்த இட ஒதுக்கீட்டையும் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

Risk to all reservations.. Ramadoss Shock information

தமிழ்நாட்டில் 1980-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீடுகளுக்கும் ஆதாரம் அம்பாசங்கர் ஆணைய அறிக்கை தான். ஆனால், அதை செல்லாததாக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு முயல்கிறது. இது தான் ஒட்டுமொத்த சமூகநீதிக்கும் ஆபத்தானது. வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்தவர்களில் முதன்மையானவர்கள் இந்த இட ஒதுக்கீட்டால் எந்த வகையிலும் பாதிக்கப்படாதவர்கள். வன்னியர்களின் இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள், அடுத்தக்கட்டமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இப்போது வன்னியர் இட ஒதுக்கீடு  ரத்து செய்யப்பட்டதற்காக மகிழ்ச்சியடைபவர்கள், அடுத்து தங்களுக்கு ஏற்படப்போகும் சமூக அநீதியை உணராதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் நாம் தான் சாதித்துக் கொடுத்தாக வேண்டும். 

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்பது இன்று பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான். அதற்காக நாம் இழந்தவை  21 உயிர்கள் உட்பட ஏராளம்; நாம் செய்த தியாகங்கள் ஏராளம், ஏராளம். தென்னிந்தியாவில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 பிரிவுகளாகவும், கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும்,  ஆந்திரத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர்  42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகத் தான் இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த அமைப்பும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவைப் போராடிப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள் இட ஒதுக்கீட்டை  கிடைக்கச் செய்ததும் நாம் தான். வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். தமிழகத்தில் சமூகநீதியின் முன்னோடி நாம் தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. சமூகநீதியை பாதுகாப்பதற்காக அடுத்தக்கட்ட சட்டம் மற்றும் அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் நமக்கு வந்திருக்கிறது. அதற்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

Risk to all reservations.. Ramadoss Shock information

சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில்  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் வீழ்த்தப்படவில்லை.... எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில் தான் உள்ளன. கடந்த காலங்களைப் போலவே தமிழகத்தின் வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான சமூகநீதியையும் நாம் தான் நிலைநிறுத்தப் போகிறோம். தமிழ்நாட்டில் நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த நம்மால் தான் இது சாத்தியமாகும். அதனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios