கொரோனா வைரஸ் தொற்றால் மிகுந்த அச்சத்தில் உள்ள மக்களுக்கு அருமருந்தாக வந்திருக்கிறது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு. தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு செலவில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறியிருப்பது ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

ஐந்து மாதங்களுக்கு மேலாக  நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  ஆனால் ஆரம்பம் முதல் இருந்தே, விழிப்புடன் செயல்பட்ட தமிழக அரசு எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதன் விளைவாக மற்ற மாநிலங்களை விட உலகத்தில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு கடுமையான முயற்சிகள் எடுத்ததன் விளைவாக தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் எந்த அளவிற்கு பலன் தந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் அறிந்துள்ளனர். 

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நமது அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தில் நோய்த்தொற்று எந்த அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் கண்கூடாக காணமுடிகிறது. அதற்கான முயற்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி  பிரதிநிதிகள் என அனைவரும் கொரொனா தடுப்பு பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.  வல்லரசு நாடுகளே இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் எடப்பாடியார் தலைமையிலான அரசு எடுத்த  பகீரத முயற்சியின் காரணமாக நோய்த் தொற்று குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் அதிலிருந்து விரைவாக மீட்கப்பட்டுள்ளனர். இப்படி தமிழக அரசு எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா சமூகத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில்  தமிழக முதலமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்  கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும்  மகளிர் சுய உதவி  குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மாநிலம் தழுவிய அளவில் தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது,  மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள், இந்த நோய் குணமடைய தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்க செலவில் புதிய தடுப்பூசி போடப்படும் என்ற செய்தியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.  இது தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து தமிழக மக்கள் முதலமைச்சரை பாராட்டி, வாழ்த்தி மகிழ்ந்து வருகின்றனர். மீண்டும் அதிமுகவே ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.  

ஆனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழக முதலமைச்சரை விமர்சித்து அதில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட உடன்  தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரழிவு காலத்தில் மக்களை காக்கும் மருந்தை இலவசமாக கொடுக்க வேண்டியது மக்கள் நலன் சார்ந்த அரசின் கடமை. ஆனால் அதை ஏதோ சலுகையை போல அவர் அறிவித்துள்ளார் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஸ்டாலினின் இந்த விமர்சனத்தை மக்கள் கடுமையான சாடி வருகின்றனர். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்கி அதன் மூலம் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடும் என்ற பதற்றத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை விமர்சிப்பதாகவும், வயிற்றெரிச்சல் பிடித்த திமுக, வயிற்றெரிச்சல் பிடித்த ஸ்டாலின், எனவும் சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் திமுக தலைவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.