முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், அமமுக அமைப்புச் செயலாருமான எஸ்.சிவராஜ்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த எஸ்.சிவராஜ், ரிஷிவந்தியம் தொகுதியில் காங்கிரஸ், தமாகா சார்பில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின்னர், 2014-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அதன்பின்னர்,  டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

 

இந்நிலையில், அமமுக அமைப்புச் செயலாருமான எஸ்.சிவராஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை அவர் பலனின்றி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு அமமுக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.