Asianet News TamilAsianet News Tamil

நாட்டில் உணவு பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது..!! 4.36 லட்சம் கோடி பணம் உள்ளது : ரிசர்வ் வங்கி

அரிசி கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது என்றும் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் 4.36 லட்சம் கோடி பணம் கையிருப்பில் உள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தாவல் தெரிவித்துள்ளார்.

rice and wheat has in stock  and 4.36 lakh crore money in banks - reserve bank announced
Author
Mumbai, First Published Apr 17, 2020, 11:16 AM IST

அரிசி கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளது என்றும் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் 4.36 லட்சம் கோடி பணம் கையிருப்பில் உள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தாவல் தெரிவித்துள்ளார். இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார் , ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறையாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த  அவர்,  ஊரடங்கு  நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வங்கிகள் வழக்கம்போல இயங்குவதை ஆர்பிஐ உறுதிசெய்துள்ளது ,  இக்கட்டான சூழ்நிலையிலும்  வங்கிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன . கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பொருளாதாரத்துக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது, உலக அளவில் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கொரோனாவால்  பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது ,  கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாராதண சூழலால்  நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  ஆனால்  வைரஸ் பரவாமல் தடுப்பதே நம் முக்கிய நோக்கமாக உள்ளது. 

rice and wheat has in stock  and 4.36 lakh crore money in banks - reserve bank announced

இந்தியாவில் அரிசி , கோதுமை ,  எண்ணெய் ,  பருப்பு உள்ளிட்ட பொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதால் நாட்டு மக்கள் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார் .  2021 -22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7. 4 சதவீதமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார் . கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் மாதம் வரை வாகன உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் .  ஆனாலும் கொரோனா போருக்கு எதிராக ஆர்பிஐ எந்த நிலையிலும்  தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.   கச்சா எண்ணெய் விலையில் நிலையற்ற தன்மையை தொடர்ந்து நீடிக்கிறது ,  இந்த ஆண்டு நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக உயர்ந்துள்ளது,  ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என ஆர்பிஐ அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது இதனால் மக்களுக்கு தேவையான ரூபாய் நோட்டுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் மட்டும் பொரோளாதார வீழ்ச்சி இல்லை,   உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக குறைந்து வருகிறது , வருகிறது உலக அளவில் பொருளாதாரம் 9 ட்ரில்லியன் அளவிற்கு  வீழ்ச்சி அடைந்துள்ளன. 

rice and wheat has in stock  and 4.36 lakh crore money in banks - reserve bank announced

ஊரடங்கு நடைமுறையில் உள்ள போதும்  97% ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும் என்றார்,  இத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டில் உள்ள அனைத்து  வங்கிகளையும் சேர்ந்து மொத்தமாக  4.36 லட்சம் கோடி கையிருப்பில் உள்ளது .  இந்தியாவில் மட்டும் ஏற்றுமதி உற்பத்தி 4.55 சதவீதமாக குறைந்துள்ளது ,  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது ,  தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்கு பின்னர் பொருளாதாரத்தை முன்னேற்ற எல்லா திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது.  ஜி 20 நாடுகளில் இந்தியாவில் தான் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.  கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,   நாட்டில் 34. 57 சதவீதம் ஏற்றுமதி சரிந்துள்ளது, உலகப் பொருளாதாரம் 9 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளது.  ஊரடங்கு சமயத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பண பரிமாற்றங்கள் அதிக அளவில் நடந்துள்ளன ,  சிறுகுறு தொழிலாளர்களுக்கு கடன் உதவிகள் வழங்க ரிசர்வ் வங்கியில்  பாதுகாக்க 50 லட்சம் கோடி ரூபாய் பணம் கையிருப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios