Asianet News TamilAsianet News Tamil

சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி.. கட்சியில் இருந்து 9 பேரை அதிரடியாக நீக்கிய அதிமுக தலைமை..!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 2019-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் 7 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அமமுகவும் வென்றன. இதை தொடர்ந்து ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதனும், துணைத் தலைவராக மூக்கம்மாள் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

resolution of no confidence on chairman in uthamapalayam...AIADMK Action
Author
Theni, First Published Sep 21, 2021, 10:49 AM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து 6 வார்டு உறுப்பினர்கள் உட்பட 9 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 2019-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் 7 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அமமுகவும் வென்றன. இதை தொடர்ந்து ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதனும், துணைத் தலைவராக மூக்கம்மாள் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

resolution of no confidence on chairman in uthamapalayam...AIADMK Action

இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்களுடன் சேர்ந்து தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, ஜான்சி வாஞ்சிநாதன் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலைில், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குழு உறுப்பினர்களாக இருந்த 6 பேர் உள்பட 9 அதிமுக நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

resolution of no confidence on chairman in uthamapalayam...AIADMK Action

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்;- அதிமுகவைச் சேர்ந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தினாலும் ஊராட்சி ஒன்றியக் குழுவின் 1, 3 முதல் 7 வார்டுகளின் உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், அந்தோனி, மூக்கம்மாள், அறிவழகன், செல்வி, கலைச்செல்வி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அதேபோல, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சந்திர சேகரன், பிரசாத், கெப்புராஜ் ஆகியோரும் நீக்கம் செய்யப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios