வங்கிகளில்  டெபாசி செய்துள்ளவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படுமென ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதி தெரிவித்துள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது ,  இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது .  இந்நிலையில் தேசிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி வருகின்றனர் .  ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் தனியார்துறை ஊழியர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இன்றி வெகுவாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது . 

ஊரடங்கால் நாட்டில் அனைத்து தொழில் துறைகளும் முடங்கியுள்ளன , தொழிற்சாலைகளையும் தொழில் நிறுவனங்களை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது .  இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் அறிவித்து வருகின்றன.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் .  அதேபோல் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருவதுடன் சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த பேரிடரை சந்திக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது என தெரிவித்துள்ள அவர் வைரஸால் ஏற்படும் பின்னடைவை கடந்து நாட்டு மக்களுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் .  அதேபோல் வங்கிகளில் டெபாசிட் வைத்துள்ளவர்களின் பணத்திற்கு முழு உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில் வங்கிகளில்  தரப்பட்டுள்ள எல்லாவித கடன்களுக்கும் தவணை செலுத்த அடுத்த  மூன்று மாதங்களுக்கு  விலக்கு அளிக்கப்படுகிறது என்றார்,   விளக்கு அளிக்கப்பட்ட மாதங்களின்  தவளைகளை பின்வரும் மூன்று மாதங்கள் கழித்து கட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   இந்த  அறிவிப்பு வங்கிகளில் கடன் பெற்றுவர்களை  நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.