தவித்துவரும் 500க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. 

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக டெல்லியில் முறையான அடிப்படை வசதியில்லாமல் தவித்துவரும் 500க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை மீட்டுவரக் கோரி எஸ்டிபிஐ சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க இஸ்லாமியர்கள் பலரும் டெல்லியில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை அழைத்து வரவேண்டும் என தன்னிச்சையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  தமிழக அரசே சக இந்தியனின் கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்ததுதான் அவர்கள் செய்த குற்றமா?

 

மத்திய - மாநில அரசுகள்ந்ந் சக இந்தியர்கள் உயிர்காக்க தன் உதிரத்தை தியாகம் செய்த தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் அரசியல் செய்யாதே.. டெல்லியில் சிக்கி தவிக்கும் ஜமாத்தினரில் கொரோனா இல்லாத ஐவர் மருத்துவ வசதி கிடைக்காமல் மரணம். அவர்களை மீட்பதில் ஏன் பாரபட்சம்.?

தன்னுடைய பிளாஸ்மாவை கொடுத்து பிறர் உயிர்காக்க முன் வந்த தப்லீக் ஜமாத்தினரை வீடு திரும்ப விடாமல் அடைத்து வைப்பது மனித தன்மையற்ற செயல். தப்லிக்கை மீட்டுவா... இல்லையேல் பப்ளிக் வீதிக்கு வருவார்கள். எஸ்.வி.சேகர் வீட்டுக்கு பால் மாற்றி கொடுப்பது மட்டும் உங்கள் வேலை அல்ல. டெல்லியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் தப்லீக் ஜமாத்தினரை உடனடியாக தமிழகம் மீட்டு வா’’ என அவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.