திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 28-ம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். 

கடைசியாக ஜூலை 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 6 நாட்களாகியும் இன்னும் காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. 

இன்னும் சற்று நேற்றத்தில் அறிக்கை வெளியாகவுள்ளது.

இதற்கு முன்னதாக, கோபாலபுரம் இல்லத்தில் இருந்த,  திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.  கருணாநிதி போயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் தயாளு அம்மாவை அழைத்துவரப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை வராத தயாளு அம்மாள் முதல்முறையாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். தயாளு அம்மாவுடன் முக தமிழரசு, தயாநிதி அழகிரி மற்றும் அருள்நிதி உள்ளிட்டோரும் உடன் வந்துள்ளனர். இதற்கு முன்னதாக கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் வந்துள்ளதால் காவேரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

அதேபோல,  கட்சி வேலைக்காக  கும்பகோணத்திற்கு சென்ற ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அங்கு டெல்டா மாவட்ட திமுக முக்கிய புள்ளிகளை   சந்தித்ததோடு, தொழில்ட்ப பிரிவி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வந்தார். இந்நிலையில் தான் கலைஞருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதை என்ற செய்தி சொல்லப்பட்டது. இதனால் தனது சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.

இதனையடுத்து காவேரி மருத்துவமனைக்கு மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் வாந்தால் மட்டுமே இப்படி போலிஸ் பாதுகாப்பும், மோப்ப நாய் சோதனையும் செய்வது வழக்கம், அப்படி இருக்கையில் திமுக தலைவரை பார்க்க பிரதமர் மோடி வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.