முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி முதன் முறையாக அரசு விழா மேடையில் அமர்ந்தார்.

மறைந்த முதலவர் ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார் ஓ.பன்னீர்செல்வம்.

பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேல் ஆன நிலையில் முதன்முறையாக மிகப்பெரிய அரசு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்றார்.

இதில் பல முதல்கள் உள்ளுக்குள் வந்தன.

குறிப்பாக தமிழகத்துக்கு தனி கவர்னர் இல்லாததால் தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு முதலமைச்சர் குடியரசு தின விழாவில் கொடியேற்றினார்.

அதே போன்று ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எந்த ஒரு அரசு விழாவிலும் ஓ.பன்னீர்செல்வம் தனது மனையை அழைத்து வரமாட்டார்.

ஆனால் முதன்முறையாக அவரது மனைவி பி.விஜயலட்சுமி ஓபிஎஸ்சுடன் அமர்ந்து குடியரசு தின கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

முதல்முறையாக மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் ஓபிஎஸ் தனது மனைவியையும் அழைத்து வந்திருந்தது பார்த்தவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.