பீட்டர்பால் நன்றாக குடிப்பார் என்று அவரது முதல் மனைவி சொன்ன போது வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர் வனிதா.ஆனால் தற்போது குடிக்கு அடிமையாக உள்ள பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் அவரின் காதல் கணவர் பீட்டர் பாலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், குடிபோதையில் இருந்த அவரை வனிதா அடித்து துரத்தியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து வனிதா  தனது சமூகவலைதள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.இந்தநிலையில் நடிகை வனிதா விஜயகுமார் அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “நான் ஏமாந்தது எல்லாமே அன்பினால் மட்டும் தான்; விட்டுக் கொடுத்ததும் அன்பினால் தான். நிறைய பேருக்கு தெரியாது நான் ஏன் இரண்டு முறை வாழ்க்கையில் விவாகரத்து வாங்க வேண்டும்? சிலர் தன்னை ஏமாற்றி வாழ்வார்கள் சிலர் குழந்தைகளுக்காக சகித்துக் கொண்டு வாழ்வார்கள். ஆனால் நான் குழந்தைகளுக்காக தான், குழந்தைகள் சில விஷயங்களை பார்க்க கூடாது என்று தான் இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டேன்.

ஆனால் இந்த விஷயத்தில் நான் தடுமாறி விட்டேனா என்று எனக்கு தெரியவில்லை. நான் இப்பொழுது கூட அவரை குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தப்பு செய்கிறார். அவர் ஏன் அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை . கேட்டால் அவரது சகோதரர்கள் அவர் இப்படி தான் செய்வார் என்று கூறுகிறார்கள். மதுபோதையில் அவர் மாறிவிடுகிறார். மனசு உடைஞ்சு போச்சு; பயமா இருக்கு. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் கூட என்ன செய்வது என்று தெரியவில்லை. அவரது மனைவி அவரை பற்றிய கூறியதெல்லாம் உண்மைதான் போல.

இந்த ஒரு வருடத்தில் அவரின் வாழ்க்கையில் நான் இருந்ததற்கு கூட ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் உயிரை காப்பாற்ற தான் நான் அவர் வாழ்க்கையில் வந்திருக்கலாம். நான் இல்லையென்றால் அந்த நிமிஷத்தில் ஹாஸ்பிடலில் யாரும் சேர்த்து இருக்க மாட்டார்கள்; அவருக்கு செலவு செய்திருக்க மாட்டார்கள். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரின் நண்பர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்க பாருங்கள். பணம் செலவு செய்கிறார் என்று அவரை சிலர் ஏற்றி விடுகிறார்கள். அவருக்கு புத்தி இல்லை; அதனால் நான் மற்றவர்களை திட்டுவதில் நியாயம் இல்லை. நான் காதலித்தது உண்மை; என் காதல் உண்மை. ஆனால் நான் ஏமாந்து விட்டேன். தோற்று விட்டேன். நான் காதல் மீதும் திருமணத்தின் மீதும் எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பவள். ஆனால் எனக்கு அது அமையவில்லை; என் வாழ்க்கையில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை.


சீக்கிரம் இந்த வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று எனக்கு தெரியாது . இந்த நிலைமை புதிது கிடையாது நான் இருப்பது போல பல பெண்கள் வேதனைப்பட்டு கொண்டிருப்பார்கள். இது என் வாழ்க்கைக்கு முடிவு அல்ல. நான் என் வாழ்க்கையை தொடர்வேன்; என் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்” என்றுகண்ணீர் மல்க கூறியுள்ளார்.