காஷ்மீர் மாநிலம் பந்திபுர் - குரேஷ் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்‍கு,ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், காஷ்மீர் மாநிலம், பந்திபுர் - குரேஷ் பள்ளத்தாக்கில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச் சரிவில், இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிழக்கு கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், பல்லக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி ஆகிய இருவரும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து வருந்துவதாக தெரிவித்துள்ளார்.



இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள். இளவரசன் மற்றும் சுந்தரபாண்டி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் ஓபிஎஸ் தெரிவித்துக்கொண்டுள்ளார். . 

உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் உடனடியாக நிதிஉதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.