Asianet News TamilAsianet News Tamil

மகளின் திருமணத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை... ரூ.10 லட்சத்தை அள்ளிக்கொடுத்த முதல்வர்..!

செஞ்சி அருகே மகளின் திருமணத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Relief Fund...Edappadi Palanisamy announced Rs.10 laks
Author
Villupuram, First Published Dec 2, 2020, 11:01 AM IST

செஞ்சி அருகே மகளின் திருமணத்தின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கெங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(47), கட்டிட தொழிலாளி. கடந்த வாரம் இவர் தனது மகள் நித்யாவின் திருமணத்திற்காக தனது வீட்டில் பந்தல் போட்டிருந்தார். அப்போது இரவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பந்தல், சரவணன் மீது விழுந்தது. அப்போது அதில் இருந்த மின்சார விளக்குகளுக்காக போடப்பட்டிருந்த ஒயர், சரவணன் மீது விழுந்ததில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

Relief Fund...Edappadi Palanisamy announced Rs.10 laks

இந்நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios