Refraction from AIADMK Popular Singer Information!
அதிமுகவில் இருந்து நிரந்தரமாக விலகிவிட்டதாகவும், வேறு எந்த அணியிலும் சேரப்போவதில்லை என்றும் பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புறப் பாடகியான அனிதா குப்புசாமி, பன்முக தன்மை கொண்டவர். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் கிராமியப் பாடல்களை அச்சுபிசகாமல் பாடுவதில் திறமையானவர்.

பிரபல நாடடுப்புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமியை, அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இணைந்து மேடை கச்சேரிகள் நடத்தும்போது பார்வையாளர்கள் உற்சாகத்துடன் இருந்து வருவர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் அனிதா குப்புசாமி. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின்போது, அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளராகவும் அவர் வலம் வந்தா. எதிர்கட்சிகளை சாடும்போது, சில நேரங்களில் அனிதா பாட்டாகவே பாடி அதிமுகவினரை குழிப்படுத்தியுள்ளார்.
.jpg)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், அனிதா குப்புசாமி, அதிமுகவை விட்டு விலகுவதாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
சென்னை, ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைமை பிடிக்காததால், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும், வேறு எந்த அணியிலும் இணையப்போவதில்லை என்றும் கூறினார்.

இது குறித்து, தனது பேஸ்புக் பக்கத்தில், அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகிவிட்டேன் என்று அதிகாரப்பூர்வமாக பத்திரிகையில் அறிவித்துவிட்டேன். யாராவது திரித்துச் சொன்னால் நம்பாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார் அனிதா குப்புசாமி.
