Asianet News TamilAsianet News Tamil

கூடங்குளம் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் விவகாரம்... பிரதமர் மோடி பதிலால் அதிர்ந்து போன பொதுமக்கள்..!

கூடங்குளம் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Recycling of Kudankulam approaches... PM Modi response... public shocked
Author
Thirunelveli, First Published Sep 17, 2020, 2:44 PM IST

கூடங்குளம் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இது, இந்திய அணுமின் கழகத்தின் நிறுவனத்தினால் ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய அணுமின் நிலையமாகும்.  கூடங்குளத்தில் உள்ள அணு உலைகள், மென்நீர் உலைகள் (PWR/LWR) வகையை சார்ந்தவை, இந்தியாவின் பிற இடங்களில் உள்ளவை கணநீர் உலைகளாகும். கூடங்குளம் தொடர்பாக ரஷியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி, இங்கே உற்பத்தியாகும் அனைத்து கழிவுகளும் ரஷியாவிற்கு அனுப்பிவைக்கப்படும் என்றுதான் முடிவு செய்யப்பட்டது. பிறகு இரண்டாவது ஒப்பந்தத்தில், கூடன்குளம் கழிவுகள் கூடங்குளத்திலேயே கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலம் முடிவுற்றபிறகு அவை மறுசுழற்சி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.

Recycling of Kudankulam approaches... PM Modi response... public shocked

இந்நிலையில், நாடாளுமன்றத்தில், இது தொடர்பாக சு.வெங்கடேசன் முக்கியமான கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள, அணுசக்தி துறைக்கு பொறுப்பு வகிக்கும் இந்திய பிரதமர், கூடங்குளம் போன்ற அணுவுலைகளிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை, முதலில் சில ஆண்டுகள் அணுவுலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சிமையத்திற்கு எடுத்துப்போகும் வரை அருகாமையில் உள்ள மையத்தில் (away from reactor) வைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது மூலம், நீண்டகாலத்திற்கு அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.

Recycling of Kudankulam approaches... PM Modi response... public shocked

மேலும், இந்தியாவிற்கான "ஆழ்நில அணுக்கழிவு மையம்" (DGR) இபோதைக்கு தேவை இல்லை என்று பதில் அளித்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதி மன்றம் 2013ஆம் ஆண்டுகளில் வழங்கிய தீர்ப்பில், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவின் டிஜிஆர் அமைக்கப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவும் உள்ளது இந்த பதில். 2014ஆம் ஆண்டும் வழங்கிய தீர்ப்பிலும் டிஜிஆர் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவுள்ளது பிரதமரின் இந்த பதில். கூடங்குளம் அணுஉலைகள் தொடர்பாக போராடும் மக்கள் எழுப்பிவந்த கேள்விகளில் எவ்வளவு உண்மை இருந்தது என்பதை அரசு கொடுத்துள்ள பதிலில் இருந்து புரிந்துகொள்ளமுடிகிறது என்று சு.வெங்கடேசன் வேதனை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios