தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை மூன்று துண்டுகளாக பிரித்து, அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அரக்கோணத்தை அடுத்த தண்டலம் முதல் சோளிங்கரில் இறுதி கிராம் முதல் திருப்பத்தூரை அடுத்த கந்திலி கிராமம் வரை, வேலூர் மாவட்ட எல்லை பரந்து விரிந்து காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை எடுத்துக்கொண்டால், காஞ்சிபுரம் எடுத்து காஞ்சிபுரத்தை அடுத்த, காவேரிப்பாக்கம் முதல் நாட்றம்பள்ளி அடுத்த வெளக்கல் நத்தம் வரை 245 கிலோமீட்டர் நீண்டு பரந்து விரிந்து காணப்படுகிறது.

13 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் அரக்கோணம் ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, கே வி குப்பம், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் அடக்கம். இதில், கடைக்கோடி தொகுதியான திருப்பத்தூரை பிரித்து தலைமையிடமாகக் கொண்டு ஏலகிரி
மாவட்டம் அல்லது திருப்பத்தூர் மாவட்டம் என பிரித்துக் கொடுக்க வேண்டுமென, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர் கோரிக்கைகளும், போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை இருந்த கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் இதை பெரிய அளவில் கண்டுகொள்ளாத நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஏற்கனவே, நெல்லையை பிரித்து தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என தொடர்ந்து புதிய மாவட்டங்களை உருவாக்கிய வகைகள் தற்போது பிரிக்கப்பட்ட வேலூரோடு சேர்த்து மொத்தம்  37 மாவட்டங்கள் தமிழகத்தில் இருக்கும் இந்த நிலையில் தான் சுதந்திர தினத்தன்று எடப்பாடி அறிவித்த இந்த திடீர் அறிவிப்பு திருப்பத்தூர் பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எந்த ஒரு அரசு விஷயத்திற்கும் 90 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே, அப்பகுதி மக்களிடம் இருந்து வந்தது. அந்த குறை நீங்கியதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் திருப்பத்தூர் பகுதி மக்கள். இது ஒருபுறம் இருக்க எதிர் கட்சியினர் சிலரோ தேர்தல் தோல்வியால் வந்த விரக்தியால் வேலூர் மாவட்டத்தை துண்டாடி விட்டது. அதிமுக அரசு என்ற கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக திமுக அதிக வாக்குகளை பெற்ற வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டத்துடன் சேர்க்கப்படும் என தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க இது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல, நீண்ட நாட்களாக சொல்லப்பட்ட வந்த ஒரு விஷயமாகும் ஒரு வருடத்திற்கு முன்பு கூட மாவட்ட அமைச்சரான கே.சி.வீரமணியும் வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்பதை பேட்டி அளித்திருந்தார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எனவே இதில் அரசியல் ஒன்றும் இல்லை என்றும் அடித்துக் கூறுகின்றனர் அதிமுக விசுவாசிகள்.